இலங்கை உயர்ஸ்தானிகரகம் சிட்னியில் நடத்திய நடமாடும் சேவை
அவுஸ்திரேலிய கென்பெராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம், சிட்னியில் வசிக்கும் சுமார் 30,000 இலங்கையர்களின் வசதிக்காக அண்மையில் நடமாடும் தூதரக சேவையை நடத்தியுள்ளது.
இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கான தூதரக சேவைகளை மேம்படுத்துவதற்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
இரட்டை குடியுரிமை விண்ணப்பங்கள்
சிட்னியின் செவன் ஹில்ஸில் உள்ள நியூ சவுத் வேல்ஸின் சிங்கள கலாசார மன்றத்தில் இந்த நடமாடும் தூதரக சேவை நடத்தப்பட்டது.
இது ஏராளமான இலங்கையர்கள் வசிக்கும் பகுதியாகும்.
சிங்கள கலாசார மன்றத்தின் தன்னார்வலர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள், சிட்னியில் உள்ள பிற சங்கங்களுடன் சேர்ந்து, சேவையை வெற்றிகரமாக நடத்துவதில் இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கு உதவியுள்ளன.
கடவுச்சீட்டு விண்ணப்பங்கள், பிறப்புச் சான்றிதழ் வழங்கல் மற்றும் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தூதரக சேவைகளில் சுமார் 120 பேர் பயன் பெற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
