கிளிநொச்சியில் நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் (Video)
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சித்திட்டமானது கிளிநொச்சியில் அமைந்துள்ள திறன் விருத்தி வளாகத்தில் இன்று (01.11.2022) காலை 9 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
குறித்த நடமாடும் சேவை நிகழ்வு நேற்று (31.10.2022) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்று இரண்டவது நாளாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
கிளிநொச்சியில் நடமாடும் சேவை
இந் நடமாடும் சேவையில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு
மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மேற்படி நடமாடும் சேவையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகம் ஆகிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.
சான்றிதழ்கள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கல்
பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பெற்றுக் கொள்ளல், பிரஜாவுரிமை சான்றிதழ் பெற்றுக் கொள்ளல், இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கான காணித்தேவை மற்றும் காணி உரிமை பிரச்சினைகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து மற்றும் உயிரிழப்பு காயத்திற்கான நஷ்டஈடு பெற்றுக் கொள்ளல், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினூடாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கோவைகளை பூரணப்படுத்தல் தொடர்பான சேவைகளும் நடைபெறுகிள்றன.
மேலும், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான
கொடுப்பனவு, இறப்பு, காயமடைந்தவர்களுக்கான கொடுப்பனவு, அரசாங்க ஊழியர்களுக்கான
கொடுப்பனவு ஆகியனவும் வழங்கிவைக்கப்பட்டன.








16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
