ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் தேசிய ரூபவாஹினி: சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் (Video)
அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பெருந்திரளானோர் கூடி தேசிய ரூபவாஹினிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது அப் பகுதியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் கலையகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து கலையகத்தினை முற்றுகையிட்டுள்ளதுடன், செய்தி ஒளிப்பரப்படும் கலையகத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும், சுயாதீன தொலைக்காட்சி (ITN) தொலைக்காட்சி சேவைகளும் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நேற்று (12) காலை முதல் தேசிய ரூபவாஹினியின் கலையகத்திற்கு பலத்தப் பாதுகாப்புப் போடப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.




பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
