யாழ்.மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை!
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகமும் வலிகாமம் மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
நடமாடும் சேவை, எதிர்வரும் 16.09.2025 அன்று சங்கானைப் பிரதேச செயலகத்தில் காலை 8.30 தொடக்கம் மாலை 3.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
இதன்போது கீழ்வரும் சேவைகள் வழங்கப்படவுள்ளன.
1.ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை)
2.ஓய்வூதியம் தொடர்பான சேவைகள்
3.பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள்
4.மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள்
5.பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள்
6.பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்
7.மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள்
8.திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ)
9.சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்
10.முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள்
11.காணி தொடர்பான சேவைகள்
12. மருத்துவ முகாம் - பொது மருத்துவ பரிசோதனை, கண்புரை பரிசோதனை (Cataract), இலவச மூக்குக்கண்ணாடி வழங்குதல் (வறியவர்களுக்கு) போன்ற சேவைகள் இந்த நடமாடும் சேவையின்போது வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





