குறிஞ்சாக்கேணி சுகாதார பிரிவில் தடுப்பூசி செலுத்துவதற்காக நடமாடும் சேவை ஆரம்பம்
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி சுகாதாரப் பிரிவில் தடுப்பூசி செலுத்துவதற்காக நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.ஏ. அஜித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,
30 வயதிற்கு மேற்பட்ட விசேட தேவையுடையவர்களும் மற்றும் இத்தா மார்க்கக் கடமையை அனுஷ்டிக்கும் தாய்மார்களும் நடமாடும் சேவை மூலம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, இவர்கள் பெயர், முகவரி அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு வாட்ஸ்அப் மூலமா அல்லது குறுந்தகவல் மூலமோ தங்களுடைய விபரங்களை அனுப்பி வைத்தால், அவர்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
0771210302, 0776789328, 0779312196
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri