இரவு பகலாக தொடர் மின்வெட்டு! கடும் கோபத்தில் அரசை சாடும் மக்கள் (VIDEO)
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் மின் உற்பத்திக்கு தேவையான எண்ணையை இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றது.
இதனால் மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் தினமும் 7½ மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுழற்சி முறையில் தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்த மின் வெட்டினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்சாலை நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மின்வெட்டு நீடித்தால் இலங்கை மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் அபாய சூழ்நிலை நிலவி வருகின்றது.
இலங்கையில் தற்போது பிரதான பிரச்சினையாக எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன் இரவு பகலாக நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கின்றனர்.
இந்நிலையில், நாளாந்தம் சுழற்சி முறையில் ஏழரை மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதால் பொது மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதுடன்,அரசாங்கத்தையும் இவ்வாறு கடுமையாக சாடியுள்ளனர்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
