பொலிஸார் தொடர்பில் கஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
பிரபல பாதாள உலகக் குழு தலைவர் கெஹல்பத்தர பத்மே, இலங்கை பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் தொடர்பிலான சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்து, பெக்கோ சமன் உள்ளிட்ட பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கு இலங்கை மற்றும் இந்தோனேசிய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
கெஹல்பத்தர பத்மேவிற்கு இந்த நடவடிக்கை தொடர்பில் முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டிருந்தது எனவும் பொலிஸ் உத்தியோகத்தர்களே இது குறித:து கூறியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சர்வதேச பொலிஸாரினால் பிறப்பிக்கப்பட்ட சிகப்பு எச்சரிக்கை அறிக்கை தொடர்பிலும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
இன்டர்போல் பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கெஹல்பத்தர பத்மேவின் புகைப்படத்தையும் சில பொலிஸ் அதிகாரிகள் பத்மேவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியந்துள்ளது.
இலங்க பொலிஸ் குழுவொன்று இந்தோனேசியா சென்றுள்ளமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பத்மே உள்ளிட்டவர்கள் வேறும் இடத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
