நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த பாரிய முயற்சி:பிரதான நகரங்களில் ஒன்று கூடும் தேரர்களால் ஏற்படப்போகும் ஆபத்து
ராஜபக்சவுக்கு சார்பான பௌத்த பிக்குகள் நாட்டின் பிரதான நகரங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட தயாராகியுள்ளதாக இலங்கை புலனாய்வு தகவல்களை சுட்டிக்காட்டி லண்டனில் இருந்து இயங்கும் சர்வதேச ஐஓடிபிபி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் (IODPP Police) இணையதளத்தில் இது தொடர்பில் அதன் தலைவர் அஜித் தர்மபால மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
நாட்டை போரின் பிடியிலிருந்து காப்பாற்றிய தலைவரின் பாரியாரான தேசிய தாயை சிறையில் இடப்படுவதை தடுக்கும் முயற்சியாகவே இதை ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் எதிர்வரும் நாட்களில் பிரிந்திருக்கும் மொட்டுக் கட்சி மற்றும் சுதந்திர கட்சிகளின் உறுப்பினர்களும இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.