சிறையில் ரஞ்சனுக்கு தனியான தொலைக்காட்சி பெட்டி
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தனியான தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டுள்ளது.
அவர் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த பின்னர், இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தனியான மின் விளக்கு, மெத்தை மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனை தவிர ரஞ்சன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் அவர் வசித்து வந்த மாதிவல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் உள்ள வீட்டை மேலும் ஆறு மாத காலத்திற்கு பயன்படுத்தவும் அனுமதி வழஙக்ப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தன்னை ஜனாதிபதியின் விசேட மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு, ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியிடம் எழுத்துமூலமான கோரிக்கையை விடுத்துள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam