ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு தனித் தமிழீழமே தீா்வு: இந்தியாவில் இருந்து கோரிக்கை! செய்திகளின் தொகுப்பு
ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு தனித் தமிழீழமே தீா்வாக அமையும் என்று இந்தியாவின் பாட்டளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அவர் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும், தமிழர்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில் இன்னுயிர் ஈந்த ஈழப்போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நவம்பா் 27 ஆம் நாள் மாவீரா் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாளில் ஈழ விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். இலங்கையின் களச்சூழல் மாறியிருக்கலாம்.
ஆனால், தனித்தமிழ் ஈழத்துக்கான தேவை அப்படியே தான் இருக்கிறது. அதுதான் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வும் கூட. இந்தியப் பெருங்கடல் பகுதியில் மாறி வரும் சூழலும், அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கமும் தமிழீழம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றி அமைப்பதற்கான காரணிகளாக உருவெடுத்து வருகின்றன.
உலகெங்கும் உள்ள ஈழத்தமிழா்களிடம் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதியநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாடலுக்கு நடனமாடிய நடிகை மாளவிகா வா இது! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ Cineulagam
மெஸ்ஸிக்கு ஒருமுறை இல்லை! FIFA வரலாற்றிலேயே இருமுறை Golden Boot வாங்கிய முதல் வீரர் இவர்தான் News Lankasri