கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திருகோணமலைக்கு விஜயம் (photos)
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திருகோணமலையிலுள்ள புகழ்பெற்ற சர்வமத வழிப்பாட்டு தளங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநராக ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இன்று (18.05.2023) அவர் திருகோணமலையில் உள்ள திருகோணேஸ்வர ஆலயத்தில் நடைபெற்ற பூஜைகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் பௌத்த விகாரை மற்றும் கிறிஸ்தவ ஆலயம், பள்ளி வாசல் போன்ற வழிப்பாட்டிடங்களுக்கும் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
சர்வமத வழிப்பாடு
இருந்தபோதிலும் ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்க முற்பட்டிருந்த போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |