மலேசியாவில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செந்தில் தொண்டமான்!
மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon Yeow) தலைமையில் நடைபெற்ற உலக தமிழ் வல்லுனர்களின் ரைஸ் பொருளாதார மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் தமிழ் மக்களின் பொருளாதாரத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிப்பு வழங்குபவர்கள் பங்குபற்றினர்.
இதன்போது, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செந்தில் தொண்டமான் உரையாற்றுகையில், தமிழர்கள் தமிழ்நாட்டில் மாத்திரமின்றி உலகெங்கும் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.
பொருளாதார மாநாடு
மன்னர் இராஜராஜ சோழன் காலம் தொடக்கம் தற்போது வரை வணிக ரீதியாக தங்களது வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தனர். தமிழர்கள் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி உலகம் முழுவதும் வியாபித்துள்ளனர்.
மேலும் தொழில் வல்லுனர்கள் காலத்திற்கு ஏற்ப தொழிலை மேம்படுத்த வேண்டும். அதற்கு ஒரு நல்ல உதாரணமாக Nokia கையடக்க தொலைபேசியை குறிப்பிடலாம்.
10,15 வருடங்களுக்கு முன்பு Nokia கையடக்க தொலைபேசி மாத்திரமே சந்தையில் முன்னிலையில் இருந்தது. அவர்கள் அவர்களுடைய தரத்தையும், உற்பத்தியையும் இன்றுவரை குறைக்கவில்லை, ஆனால் காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றங்களை கொண்டுவராததால் இன்று சந்தையில் முதலிடத்தை தக்கவைத்து கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Apple, Samsung போன்ற நிறுவனங்கள் காலத்திற்கு ஏற்ற வகையில் தங்களது உற்பத்தியை மேம்படுத்தியதால் இன்று சந்தையில் அவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
எமது உற்பத்திகள் எவ்வளவு தரமானதாக இருந்தாலும் காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றம் பெறவில்லை என்றால் வணிக ரீதியாக நாம் பின்தள்ளப்படுவோம்.அதற்கு Nokia ஒரு சிறந்த உதாரணம் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
தொண்டமானுக்கு அழைப்பு
மேலும் எதிர்காலப் பொருளாதார சிந்தனைகள் கொண்ட சர்வதேச அரசியல் தமிழ் தலைவர்களில் மிக முக்கியமான ஒருவராக செந்தில் தொண்டமான் அடையாளம் காணப்பட்டு, இம்மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ஆம் ஆண்டில் கொவிட் தொற்று ஏற்பட்டு, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் போது இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய மத்திய அரசுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு இலங்கைக்கு பல்வேறு சமூக, பொருளாதார உடனடி உதவிகளை பெற்றுக்கொடுத்திருந்தார்.
இந்திய மத்திய அரசுடன் கலந்துரையாடி சுமார் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான உணவுப்பொருட்களை பெற்றுக்கொடுத்தமை, தமிழக அரசிடம் இருந்து 40 இலட்சம் குடும்பங்களுக்கு 10 கிலோ வீதம் அரிசியை பெற்றுக் கொடுத்தமை.
இலங்கையில் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்த வைத்தியசாலைக்கு இலவச மருந்துகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 500 மெட்ரிக் தொன் பால்மாவை பெற்றுக் கொடுத்தமை,
இந்தியாவில் இருந்து எரிப்பொருளை குழாய் வழியாக கொண்டுவரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியமை, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைத்து அதனூடாக சுற்றுலாத்துறை மேம்படுத்துதல் போன்ற வேலைத்திட்டங்களை சமூக நலன்கருதி முன்னெடுக்க பங்களிப்பு வழங்கியதன் பிரகாரம் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
