விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்த செந்தில் தொண்டமான்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமாகிய தொல்.திருமாவளவனை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு தமிழ்நாட்டின் சென்னை - வேளச்சேரி அருகே உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தின் அம்பேத்கர் திடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் தொல்.திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு நடப்பு அரசியல்
இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் அவர்கள் அம்பேத்கர் திடலில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழ்நாடு நடப்பு அரசியல் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கெடுத்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். அவரது வருகைக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
