தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலக குழு பணிப்பாளராக செந்தில் தொண்டமான் நியமனம்
தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலக குழு பணிப்பாளருக்கான நியமனக் கடிதம் நீதி அமைச்சர் அலி சப்ரியால் செந்தில் தொண்டமானிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமகாலத்தில் தேவையாக இருக்கும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க குழுவிற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்த விசேட குழுவை நியமித்துள்ளார்.
இந்த அதி உயர் குழுவில் தமிழ் மக்கள் பிரதிநிதியாக உள்வாங்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமானுக்கான நியமனத்தை நீதியமைச்சர் அலி சப்ரி வழங்கியுள்ளார்.
அபிவிருத்தியடைந்துவரும் இலங்கை போன்ற நாடுகளில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்பது மிக முக்கிய இடத்தை வகித்துள்ள நிலையில் மேற்கத்தேய நாடுகளும் இந்த விவகாரத்தை வலியுறுத்தி வருகின்றன.
பல்லினச் சமூகங்களைக் கொண்ட சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தேசிய நல்லிணக்கமும், தேசிய ஒருமைப்பாடுமே அந்த நாடுகளை அபிவிருத்தி பாதையில் இட்டுச் சென்றுள்ளன.
இந்த நிலையில், தேசிய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் இலங்கையில் கட்டியெழுப்புவதற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெறுகிறது.
இதற்கமையவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தக் குழுவை நியமிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அத்துடன், இந்த குழுவின் அங்கத்தவர்களாக பொறுப்பு வாய்ந்த உயர்நிலை பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு, உள்வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
