யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியராகப் பதவி உயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின்நிதி முகாமைத்துவ துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
பதவி உயர்வு
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த நிதி முகாமைத்துவ துறையைச்சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சசீலா பாலகோபியின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின் படி, நிதி முகாமைத்துவ துறையைச்சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சசீலா பாலகோபி நிதி முகாமைத்துவத்தில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.