சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் காலமானார்
வவுனியாவைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் இன்று அதிகாலை காலமானார்.
பி.மாணிக்கவாசகம் என அறியப்படும் இவர் பிபிசி உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு செய்தியாளாராக பணிபுரிந்துள்ளார்.
பல் பரிமாணங்களை கொண்ட இவர் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நூல்கள் என்பவற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
யுத்த காலத்தின் தமிழ் மண்ணின் அவலங்களை உலகறியச் செய்த ஊடகவியலாளர்களில் இவர் முக்கியமானவராக திகழ்கிறார்.

யாழ் ஊடக அமையம் 2019ம் ஆண்டு மயில்வாகனம் நிமலராஜன் ஞாபகர்த்தமான நெருக்கடியான சூழலில் அறிக்கையிடல் பணிக்கான விருதை இவருக்கு வழங்கி கௌரவித்திருந்தது.
மேலும் இவர் பல்வேறு விருதுகளை பல்வேறு அமைப்புக்களில் இருந்து பெற்றுக்கொண்டமை விசேட அம்சமாகும்.
இதேவேளை, மறைந்த ஊடகவியலாளர் பி மாணிக்கவாசகத்தின் புகழுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam