பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட செஞ்சோலை படுகொலை நினைவு நாள் (Photos)
செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் பிரித்தானியாவில் உள் ளஉலகத் தமிழர் வரலாற்று மையத்தின் இளையோர் அமைப்பினால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை 27.08.2023 உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
14.08.2006 அன்று வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த, செஞ்சோலை வளாகத்தில், இடர் கால முகமைத்துவம், தலைமைத்துவ மற்றும் முதலுதவி பயிற்சிக்காக ஒன்றிணைக்கப்பட்டிருந்த முல்லைதீவு மாவட்டத்தில் உயர்தரம் கற்றுக் கொண்டிருந்த பாடசாலை மாணவிகள் மீது நடாத்தப்பட்ட இலங்கை வான்படையின் மிலேச்சத்தனமான விமான தாக்குதலில் 53 மாணவிகள் உட்பட 56 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒவ்வொரு வருடமும் தாயகத்திலும் புலத்திலும் வாழும் ஈழத் தமிழ் உறவுகள் இணைந்து நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், பிரித்தானியாவில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், இலங்கை வான் படையால் கொல்லப்பட்ட 56 பேரின் திருவுருவப்படங்கள் அணிவகுப்பாக இளையோரினால் தாங்கிவரப்பட்டு, வளாகத்தில் அமைந்துள்ள பிரதான நினைவுத்தூவியின் முன் அணிவகுத்து நின்றனர்.

அவ்வேளை பொதுச் சுடர்களை வணக்கத்துக்குரிய மதகுரு, மற்றும் இளையோர்களான திகழ்பருதி, மதுரா, தனுசான், சஞ்சிகா ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
அதன் பின்னர், அங்கு உயிரிழந்த மாவீரர்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றப்பட்ட மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.
இதேவேளை தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது இறுதி மூச்சு வரை போராடிய வரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராலும்,, தமிழக மக்களாலும் தமிழீழ மக்களாலும் ஆழகமாக நேசிக்கப்பட்டவரும் 14 .08 2023 அன்று தமிழகத்தில் உயிரிழந்தவருமான "தடா சந்திரசேகரம்" அவர்களும் அன்றைய நாளில் நினைவு கூரப்பட்டார்.
தொடர்ந்து இளையோர்களின் நினைவுரைகளும், கலை நிகழ்வுகளும் உணர்வு பூர்வமாக எழுச்சியுடன் நடைபெற்றது. "எமக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்" எனும் மகுடவாக்கியத்துடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நிகழ்வின் சிறப்பு அம்சமாக தமிழ் மொழிக்கான இணைய வழி கல்வி சேவையினை "கல்வி"எனும் அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புடன் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் இளையோர்கள் மற்றும் தமிழ் மொழியை கற்க விரும்பும் மூத்தவர்கள் என்ற வேறுபாடு இன்றி தமிழ் மொழியினை தலைமுறை கடந்தும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இறுதியில் உறுதி ஏற்றலுடனும் மற்றும் தேசியக் கொடிகள் கையேற்புடனும் நிகழ்வுகள் நிறைவடைந்தன.














மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri