பல வருடங்களாக தொடரும் தமிழினப் படுகொலைகளுக்கு இதுவே சான்று..! உறவுகளின் கண்ணீரைத் துடைக்க நீட்டப்படும் கரம்

Sri Lankan Tamils Nothern Province Crime chemmani mass graves jaffna
By Rusath Aug 14, 2026 12:04 PM GMT
Report

செம்மணி மனிதப் புதைகுழியில் அநியாயமாகக் கொன்று புதைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் என்பதை வலியிறுத்தும் நீதியின் ஓலம்-02 தொடர் போராட்டத்திற்கு அனைத்துப் போராளிகளும் முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று(14.08.2026) அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு  குறிப்பிட்டுள்ளார்.

தொடர் போராட்டம்

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

இந்தப் போராட்டத்தினை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டும் முகமாக அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகள், சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

இலங்கை தீவில் தமிழ் மக்கள் அரச படைகளாலும், அரச படைகளின் அனுசரணையின் கீழ் இயங்கிய ஆயுதம் தாங்கிய குழுக்களாலும் கொத்துக் கொத்தாக பல்வேறு இனப்படுகொலைகளுக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளார்கள்.

பல வருடங்களாக தொடரும் தமிழினப் படுகொலைகளுக்கு இதுவே சான்று..! உறவுகளின் கண்ணீரைத் துடைக்க நீட்டப்படும் கரம் | Semmani Genocide Shows Our People Destroyed Dmp Vp

1956 தொடக்கம் 2009 யுத்தம் மௌனிக்கும் வரையான காலப்பகுதில் இலட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன் ஒரு ஆதார பூர்வமான வெளிப்பாடே செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்.

இதுவரை காலமும் தமிழ் தரப்புகளால் முவைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்டு நின்ற சர்வதேசத்திற்கு உண்மை ஒருக்காலும் உறங்காது என்பதை வெளிப்படுத்தும் முகமாக படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகள் என்புக் கூடுகளாகச் சாட்சியம் அளித்துள்ளார்கள்.

தமிழ் இனப்படுகொலை

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று எங்கள் இனத்திற்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் அனைத்திற்கும் ஆதாரமாக இந்தச் செம்மணி மனிதப் படுகொலை திகழ்கின்றது.

இனியும் சர்வதேசம் மௌனமாகத் தான் இருக்கப்போகின்றதா? என்ற கேள்வியே தற்போது தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மீது தமிழ் மக்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கை இன்னும் குறையவில்லை.

பல வருடங்களாக தொடரும் தமிழினப் படுகொலைகளுக்கு இதுவே சான்று..! உறவுகளின் கண்ணீரைத் துடைக்க நீட்டப்படும் கரம் | Semmani Genocide Shows Our People Destroyed Dmp Vp

செம்மணி உள்ளிட்ட அனைத்து படுகொலைகளுக்குமான சர்வதேச விசாரணையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான நீதியை நிலைநாட்ட காலம் தாழ்த்தாது முன்வர வேண்டும்.

இந்தக் கோரிக்கையை முன்நிலைப்படுத்தி 14ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நீதியின் ஓலம் -02 போராட்டத்திற்கு எமது ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் முழுமையான ஆதரவினை வழங்குவதுடன், எமது கட்சியின் உறுப்பினர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களால் இயன்ற ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

போராட்டத்தை குழப்ப நினைக்கும் அரசு

அத்துடன், இந்தப் போராட்டத்தை மழுங்கடிக்கும் விதமாகவும், எமது மக்கள் மத்தியில் போராட்ட குணத்தை இல்லாமல் செய்யும் நோக்குடனும் அரச தரப்பு அமைப்புகளால் குறித்த தினங்களில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும் அறிகின்றோம்.

அன்றிருந்து இன்றுவரை எமது கைகளைக் கொண்டு எமது கண்களையே குத்தும் கைங்கரியத்தை அரசு பல்வேறு வழிகளிலும் கச்சிதமாக செய்து வருகின்றது.

பல வருடங்களாக தொடரும் தமிழினப் படுகொலைகளுக்கு இதுவே சான்று..! உறவுகளின் கண்ணீரைத் துடைக்க நீட்டப்படும் கரம் | Semmani Genocide Shows Our People Destroyed Dmp Vp

அந்த நிலையில் இதுவும் ஆச்சரியமான விடயம் அல்ல. ஆனால் எமது மக்களின் தன்மானத்தில் கை வைக்கும் நிகழ்வுகளுக்கு எமது மக்களே தகுந்த பாடங்களை வழங்குவார்கள்.

எத்தனை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் கொண்ட கொள்கையின்படி, உறுதியாக நின்று நீதியின் ஓலம் -02 போராட்டத்தினை வலுவுள்ளதாக்கி சர்வதேசத்திற்கு ஒருமித்த செய்தியை எமது மக்கள் தெரிவிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொழும்பு மெகசின் சிறைச்சாலை தாக்குதல்: சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறும் நபர் வெளியிட்டுள்ள தகவல்

கொழும்பு மெகசின் சிறைச்சாலை தாக்குதல்: சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறும் நபர் வெளியிட்டுள்ள தகவல்

சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தடை விதிக்கப்படும் அபாயம்

சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தடை விதிக்கப்படும் அபாயம்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US