நாளை நள்ளிரவு முதல் தடை - பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள் ஆகியன நாளை (06) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 12 ஆம் திகதி தொடங்கும் உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாட பரீட்சைகளை ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்த பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
பரீட்சை மையங்கள் மீண்டும் தயார்
இந்நிலையில், பரீட்சைபரீட்சார்த்திகளுக்காக மேலதிக வகுப்புகளை நடாத்துதல், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துதல், மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், பரீட்சை வினாத்தாள்களை ஒத்த வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள் அல்லது துண்டுப் பிரசுரங்களை இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக வெளியிடுதல் என்பன இவ்வாறு தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறி செயல்பட்டால், அவர்கள் பரீட்சை சட்டத்தின் கீழ் குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக நாடு முழுவதும் 2362 பரீட்சை மையங்கள் மீண்டும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் வழக்கமான நடைமுறையின் படி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே பரீட்சை மையங்களுக்குச் செல்லும்போது தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுமாறும் அமைச்சகம் மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam