சுவிற்சர்லாந்தில் போர் மற்றும் பேரிடர் மருத்துவக் கருத்தரங்கு
சுவிற்சர்லாந்து இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD)ஏற்பாட்டில் தலைநகர் பேர்னில் இடம்பெற்ற கருத்தரங்கு மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைந்தது.
இக் கருத்தரங்கில் சுவிற்சர்லாந்து இராணுவத் தலைவர், இராணுவ மருத்துவப் பணிப்பாளர் நாயகம், இராணுவ உயர்மட்டத் தலைவர்கள், மற்றும் மருத்துவ விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கு
சிறப்பு விருந்தினர்களாகப் பிரான்ஸ் நாட்டின் இராணுவப் பிரதிநிதிகள்,ஜேர்மன் கூட்டாட்சிப் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந் நிகழ்வானது சுவிற்சர்லாந்தின் இராணுவ மருத்துவத் தயார்நிலை, பேரிடர் கால மருத்துவச் சேவைகள்,அவசரகால அறுவைச் சிகிச்சைகள், மற்றும் சர்வதேச மருத்துவ ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.







