கிளிநொச்சியில் மாணவர்களுக்கான சூழலியல் விழிப்புணர்வு செயலமர்வு
கிளிநொச்சி மகா வித்தியாலய உயர்தர மாணவர்களுக்கான சூழலியல் விழிப்புணர்வு செயலமர்வு கடந்தவாரம் பாடசாலையில் இடம்பெற்றது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் தனியார் நிறுவனம் ஒன்றின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வில் பருவ நிலை மாற்றங்கள் அதனால் ஏற்படும் விளைவுகள், காடுகளை பாதுகாக்க வேண்டிய அவசியம், உலகம் உள்ளுர் மக்கள் எதிர்கொள்ளும் நீர் நெருக்கடி, மக்கள் நீரை பெற்றுக்கொள்வதில் உள்ள சவால்கள், உருகும் பனிப்பாறைகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும் ஆகியன குறித்து தெளிவுபடுத்தப்பட்டன.
தெளிவூட்டல்
மேலும், சுத்தமான குடிநீர் இன்மையால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் மழை நீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் இளவேந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உத்தியோகத்தகர்கள், பிரதி அதிபர்கள், பாடசாலை மாணவர்கள ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |