பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்: கஜேந்திரன் சபையில் சீற்றம்
கடந்த வருடம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனியில் ஊர்தியை செலுத்திய சாரதியை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணையின் பேரில் அச்சுறுதல் விடுத்துள்ளமை உண்மையான குற்றவாளிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையை தடுப்பதற்கான செயற்பாடு என செல்வராசா கஜேந்திரன்(Selvarajah Kajendran) சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின் நினைவு ஊர்தி மீது திருகோணமலை - சர்தாபுர பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நினைவு ஊர்தியை செலுத்திய சாரதியை தற்போது விசாரணை என்ற பேரில் அச்சுறுத்துகின்றமை தாக்குதல் சம்பவத்தின் உண்மை தன்மையை மறைப்பதற்காகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |