சிங்களத்தின் அதியுச்ச மிலேச்சத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி காட்டம்

Sri Lankan Tamils Trincomalee Sri Lanka Politician Sri Lankan political crisis Selvarajah Kajendren
By Kajinthan Sep 18, 2023 01:59 PM GMT
Report

தியாக தீபம் திலிபனின்  நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் மேற்கொள்ளப்படுகின்ற நினைவு ஊர்தி பேரணியின் போது திருகோணமலையில் வைத்து இரு இடங்களில் சிங்களக் காடையர்களால் ஊர்தியின் மீதும், அக்கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டோர் மீதும் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

இன்றையதினம் (18.09.2023) அக்கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இனங்களுக்கிடையிலான முறுகல்

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த நாட்டினை பின்நோக்கிக் கொண்டு செல்லும் வகையிலேயே தாக்குதலை மேற்கொண்டவர்களின் செயற்பாடும், அவர்களை பின் இருந்து இயக்குபவர்களின் எண்ணப்பாடுமாக இருக்கின்றது.

சிங்களத்தின் அதியுச்ச மிலேச்சத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி காட்டம் | Selvarajah Kajendren Attacked In Trincomale

முப்பது வருட யுத்தம் இந்த நாட்டில் ஏற்படுத்திய அழிவுகளை எண்ணி இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஒன்றே நாட்டில் எதிர்கால சுபீட்சத்திற்கு ஏற்ற வழி என்று பலரும் ஜனநாயக வழியில் செல்லுகையில், நேற்றைய தினம் இடம்பெற்றிருக்கும் தாக்குதல் மீண்டும் இனங்களுக்கிடையிலான முறுகலை வலுப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது.

இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய இராணுவம், பொலிஸார் முன்னிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றமையானது. இந்த நாட்டின் பாதுகாப்புத் தரப்பு தமிழ் மக்களையும், தமிழ் பிரதிநிதிகளையும் எந்த இடத்தில் வைத்து நோக்குகின்றது என்பதை திட்டவட்டமாகப் புலப்படுத்துகின்றது. எந்த இனமாக இருந்தாலும் தன் இனத்திற்காக போராடியவர்கள் அவர்களுக்கு உயர்ந்தவர்களே.

கஜேந்திரன் எம்.பி மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

கஜேந்திரன் எம்.பி மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அவர்களுக்கு அந்த இனத்தினால் கொடுக்கப்படும் மரியாதையை மற்ற இனத்தவர்கள் வஞ்சித்தல் என்பது ஜனநாயகப் பண்பு அல்ல.

தனித்து கட்சி இலாபம்

யுத்த வீரன் என்பவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை துட்டகைமுனுவின் வரலாற்றில் இருந்து சிங்களவர்கள் அறியாமல் இருப்பது, சிங்கள மக்களைத் தூண்டிவிட்டு இவ்வாறான தாக்குதல்களை நடத்துபவர்கள் அறியாமல் இருப்பது அவர்களின் சிறுமைத்தனத்தையே காட்டுகின்றது.

சிங்களத்தின் அதியுச்ச மிலேச்சத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி காட்டம் | Selvarajah Kajendren Attacked In Trincomale 

கிழக்கில் தமிழ் இனம் எந்த நிலையில் இருக்கின்றதென்பதை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் காட்டியிருக்கின்றது நேற்றைய இந்த சம்பவம். இவற்றுக்கெல்லாம் நமக்குள் இருக்கும் ஒற்றுமையின்மையே காரணம். இவ்வாறான நினைவேந்தல்கள் எல்லாம் கட்சி சார்ந்து செய்யப்படுவது அல்ல.

இவை தமிழ் மக்களால் உன்னதமாக அனுஷ்டிக்கப்படுபவை. இவ்வாறான நினைவேந்தல்கள அனைவரும் ஒருமித்து செயற்படுத்தும் போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமா? இடம்பெறத்தான் விட்டுவிடுவோமா? அனைவரும் ஒன்றிணைந்து எத்தனையோ போராட்டங்கள் கிழக்கில் இருந்து வடக்கிற்கு சென்றுள்ளன.

இரண்டு விமானங்கள் மோதி விபத்து: விமானிகள் பலி (Video)

இரண்டு விமானங்கள் மோதி விபத்து: விமானிகள் பலி (Video)

இதன்போதெல்லாம் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லையே ஏன்? நாம் ஒற்றுமைப்பட்டு நின்றமையால் எம்மைச் சீண்ட சிங்களம் பயப்பட்டது. தனித்து தனித்து கட்சி இலாபம் கருதி இவ்வாறான நிகழ்வுகளைச் செய்யும் போது இவ்வாறானவர்களும் இது வாய்ப்பாக இருக்கின்றது.

ஒற்றுமைக்கு சவால்

நேற்றைய பாடமானது நம் ஒற்றுமைக்கு விட்டிருக்கும் சவாலாகும். இதிலிருந்து நாம் படிப்பினையைக் கற்றுக் கொள்ளாமல் இருந்தோமானால் இன்று கிழக்கில் இடம்பெற்றது நாளை இன்னொருவருக்கு வடக்கில் இடம்பெற்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

பொலிஸாரின் முன்னிலையில் கஜேந்திரன் மீதான தாக்குதல்: சுமந்திரன் விடுத்துள்ள வேண்டுகோள் - செய்திகளின் தொகுப்பு (Video)

பொலிஸாரின் முன்னிலையில் கஜேந்திரன் மீதான தாக்குதல்: சுமந்திரன் விடுத்துள்ள வேண்டுகோள் - செய்திகளின் தொகுப்பு (Video)

எனவே நமக்குள் ஒற்றுமை எப்போது அவசியம், தேர்தல் காலத்தில் மாத்திரம் தங்கள் தங்கள் கட்சி செயற்பாடுகளை முன்னெடுத்து தமிழ் மக்கள் சார்ந்த வேலைத் திட்டங்கள், இவ்வாறான நினைவேந்தல்கள் ஆகியவற்றை நாம் ஒற்றுமையாக ஒருமித்துச் செய்ய வேண்டும்.

இதன் போதுதான் இவ்வாறான சிங்களக் காடையர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். எனவே நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவமானது தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு கசப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. பழையனவற்றை ஞாபகப் படுத்துகின்றது.

சிங்களத்தின் அதியுச்ச மிலேச்சத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி காட்டம் | Selvarajah Kajendren Attacked In Trincomale

இந்த நிலைமைகள் இனிமேலும் இடம்பெறாமல் இருக்க வேண்டுமானால் தாக்குதலை மேற்கொண்ட காடையர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் அவை உரிய முறையில் இடம்பெறுமா என்பது கேள்விக் குறியான விடயமே. ஒரு தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் தமிழ் மக்களின் நிலை என்ன என்பதை இந்தியா உட்பட சர்வதேசம் புரிந்துகொள்ளும் என நம்புகின்றோம்.

எனவே தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பில் சர்வதேசத்தினூடாக விரைவில் தீர்வினைப் பெற்றுத்தர முன் வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீமெந்து விலை அதிகரிப்பு: வெளியான தகவல்

சீமெந்து விலை அதிகரிப்பு: வெளியான தகவல்

இரண்டு விமானங்கள் மோதி விபத்து: விமானிகள் பலி (Video)

இரண்டு விமானங்கள் மோதி விபத்து: விமானிகள் பலி (Video)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US