தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி தாக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்றத்தில் இருந்து திரும்பிச் சென்ற கஜேந்திரன்
திருகோணமலையில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் தியாக தீபம் திலீபனின் ஊர்தியும் தாக்கப்பட்டமை தொடர்பில் இன்று(19.09.2023) அடையாள அணிவகுப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும், அது குறித்த நேரத்தில் இடம்பெறவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அதிக காலதாமதம் ஏற்படும் என்ற காரணத்தினால் அதில் பங்கேற்காமல் திரும்பிச்சென்றுவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள பகுதிக்குள் பிரவேசித்த திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் : பொலிஸாருக்கு ஆளுநர் செந்தில் விடுத்துள்ள பணிப்புரை
திரும்பிச் சென்ற கஜேந்திரன்
தாம் இந்த அடையாள அணிவகுப்புக்காக குறித்த நேரத்துக்குள் சமுகமளித்தபோதும், அடையாளம் காட்டப்படுகிறவர்களை அணிவகுப்புக்கு முன்னிலைப்படுத்த 6 மணித்தியாலங்கள் வரை செல்லும் என்று கூறப்பட்டதை அடுத்து தாம் திரும்பிச்சென்று விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் நீதிமன்ற பதிவாளரிடம் அறிவித்ததுடன், மாற்று திகதி ஒன்றை தருமாறும் கோரியதாக கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தாமும் சட்டத்தரணி காண்டீபன் உட்பட்டவர்களும் இன்று திருகோணமலை நீதிமன்றத்துக்கு சென்றதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தியாக தீபம் திலீபனின் ஊர்திக்கு தடைவிதிக்குமாறு கோரி, முல்லைத்தீவு இலங்கை பொலிஸாரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதேவேளை அசௌகரியங்களை தடுக்கும் வகையில், தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரான திலீபனின் நினைவேந்தலை கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி மற்றும் மருதானை போன்ற இடங்களில் நடத்துவதற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்தை நீதிமன்றம் ஆகியன தடை விதித்துள்ளன.
இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல்! கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேற இந்தியா உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |