விடுதலைப் புலிகள் மீது சிங்களவர்களுக்கு வெறுப்பு காணப்படுவது இயல்பு : கஜேந்திரன் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் கம்மன்பில

Sri Lankan Tamils Uthaya Gammanpila Sri Lankan Peoples Selvarajah Kajendren
By Benat Sep 19, 2023 06:45 AM GMT
Report

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் சிங்கள சமூகத்தின் மத்தியில் கோபம், வெறுப்பு காணப்படுவது இல்பானதாகும். இவ்வாறான பின்னணியில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் சிங்களவர்கள் வாழும் பகுதிக்கு ஊர்தி பவனி செல்வது சிங்களவர்களை ஆத்திரத்திற்குள்ளாக்கி இன முரண்பாட்டை ஏற்படுத்தும்  என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அரசியல் அமைப்பை மீறியுள்ளார். ஆகவே உடனடியாக அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கையில் பெண் ஒருவரின் சொத்துக்களை அதிரடியாக முடக்கிய அரசாங்கம்

இலங்கையில் பெண் ஒருவரின் சொத்துக்களை அதிரடியாக முடக்கிய அரசாங்கம்

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் அமைப்பினரின் நோக்கங்களுக்காக உயிர் தியாகம் செய்த திலீபனை நினைவு கூரும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கு மகாகாணத்திற்கு ஊர்திப் பவனியில செல்லும் போது சிங்களவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

யார் அனுமதி வழங்கியது?

திலீபன் என்பவர் இந்த நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர். விடுதலைப் புலிகளின் நோக்கத்திற்காகவே தனது உயிரை திலீபன் தியாகம் செய்தார்.

விடுதலைப் புலிகள் மீது சிங்களவர்களுக்கு வெறுப்பு காணப்படுவது இயல்பு : கஜேந்திரன் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் கம்மன்பில | Selvarajah Kajendren Attacked

விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டு இந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான வாகனத்தில் திலீபனின் உருவப்படத்தை வைத்து கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணம் நோக்கி வாகனப் பவனியில் செல்வதற்கு யார் அனுமதி வழங்கியது?

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக திலீபனின் உருவப் படத்தை சுமந்து பொது இடத்தில் பகிரங்கமாக செல்வதற்கு அரச அதிகாரி அனுமதி வழங்கியிருந்தால் அவர் அரசியலமைப்பின் 157 அ பிரிவை முழுமையாக மீறி பிரிவினைவாதத்திற்கு அனுசரணை வழங்கியுள்ளதாகக் கருத வேண்டும்.

நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் அரச அதிகாரி செயற்படுவதற்கு அரசியல்வாதியொருவர் அழுத்தம் பிரயோகித்திருந்தால் உடனடியாக அந்த அரசியல்வாதி கைது செய்யப்பட்டு அரசியலமைப்பின் 157 அ பிரிவு பாதுகாக்கப்பட வேண்டும்.

முல்லைத்தீவு பகுதி கிராம மக்களின் முன்மாதிரியான செயற்பாடு: போதைப் பாவனையை ஒழிக்க நடவடிக்கை (Photos)

முல்லைத்தீவு பகுதி கிராம மக்களின் முன்மாதிரியான செயற்பாடு: போதைப் பாவனையை ஒழிக்க நடவடிக்கை (Photos)

சாதாரண சிங்கள சமூகத்தினரை இலக்காகக் கொண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு 300இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. பிரிவினைவாதத் தாக்குதலால் ஒட்டுமொத்த சிங்களச் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சிங்களவர்கள் தமது உறவுகளை இழந்துள்ளார்கள்.

தண்டனைக்குரிய குற்றம்

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் சிங்கள சமூகத்தின் மத்தியில் கோபம், வெறுப்பு காணப்படுவது இயல்பானதாகும். இவ்வாறான பின்னணியில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் சிங்களவர்கள் வாழும் பகுதிக்கு ஊர்திப் பவனி செல்வது சிங்களவர்களை ஆத்திரத்திற்குள்ளாக்கி இன முரண்பாட்டை ஏற்படுத்தும் ஒரு சூழ்ச்சியாகும்.

விடுதலைப் புலிகள் மீது சிங்களவர்களுக்கு வெறுப்பு காணப்படுவது இயல்பு : கஜேந்திரன் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் கம்மன்பில | Selvarajah Kajendren Attacked

2007ஆம்ஆண்டு 57ஆவது இலக்கத்தின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் 3ஆவது பிரிவுக்கமைய இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறும் வகையில், மக்களை ஆத்திரமூட்டும் வகையில் முன்னெடுக்கும் சகல செயற்பாடுகளும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அவை பாரதூரமான குற்றச்சாட்டாகக் கருதப்படுவதால்தான் அவ்வாறனான செயற்பாடுகளில் ஈடுபடும் நபருக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு  வழங்கப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அரசியலமைப்பின் 157 அ பிரிவை மீறியுள்ளார். மறுபுறம் சர்வதேச அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சமவாய சட்டத்தின் 3ஆவது பிரிவை மீறியுள்ளார்.

ஆகவே இந்த இரண்டு காரணிகளையும் முன்னிலைப்படுத்தி அவர் கைது செய்யப்பட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் எவரும் முறைப்பாடளிக்கவில்லை என அரசாங்கம் குறிப்பிடுகின்றது.

ஆகவே நாடாமளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு எதிராக நாங்கள் இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளிப்போம் என குறிப்பிட்டார். 

இலங்கையில் விரைவில் நடைமுறைக்கு வரும் சட்டம்: மீறினால் கடுமையான நடவடிக்கை

இலங்கையில் விரைவில் நடைமுறைக்கு வரும் சட்டம்: மீறினால் கடுமையான நடவடிக்கை

தவறான முடிவெடுத்த பிரபல இசையமைப்பாளரின் மகள்: எழுந்துள்ள சர்ச்சை

தவறான முடிவெடுத்த பிரபல இசையமைப்பாளரின் மகள்: எழுந்துள்ள சர்ச்சை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US