சம்பந்தனை விலகுமாறு செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க கோரிக்கை

R. Sampanthan Selvam Adaikalanathan Sri Lanka Politician Tamil National Alliance Sri Lankan political crisis
By Rakesh Jul 24, 2022 05:30 PM GMT
Report

தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தன் விலகிக்கொள்ள வேண்டும்  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

கொழும்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்குச் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? எம்.ஏ.சுமந்திரனா?

பதில்:-  அடுத்த தலைமை என்று பார்க்கின்றபோது அது கூட்டுத் தலைமை அதாவது சுழற்சி முறையிலான தலைமையாகத்தான் இருக்கும். எம்.ஏ. சுமந்திரனைத் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர் புதிதாக வந்தவர். எங்களைப் பொறுத்த வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சுழற்றி முறையிலே இருக்க வேண்டும்.

தற்போது சம்பந்தன் தலைவராக இருக்கும்போது அடுத்த தலைமை சம்பந்தமாக நாங்கள் இன்னமும் அவருடன் பேசவில்லை. ஆகவே, சம்பந்தனுக்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது கூட்டுத் தலைமையாக - சுழற்றி முறை தலைமையாகத்தான் இருக்கும். இதிலே தனிமனித தலைமையை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

சம்பந்தனை விலகுமாறு செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க கோரிக்கை | Selvam Requests Sambandhan To Withdraw

கேள்வி:- கூட்டுத் தலைமை அதாவது சுழற்சி முறை தலைமை என்றால் எவ்வாறு அமையும்?

பதில்:-  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தமிழரசுக் கட்சி, எமது ரெலோக் கட்சி, புளொட் கட்சி ஆகியன கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இருக்கின்றன. ஆகவே, அந்த அடிப்படையிலேயே சுழற்சி முறை தலைமை ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை வருடங்கள் என்று பிரிக்கப்பட வேண்டும்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு யாப்புத் தயாரிக்கப்பட வேண்டும். அது பதியப்பட வேண்டும். அந்த அடிப்படையில் சுழற்சி முறையிலான தலைமைத்துவம் ஜனநாயக ரீதியாக வரவேண்டும்.

அந்த ரீதியிலேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனிவரும் காலங்களில் செயற்படும் என்பதை நான் குறிப்பிடட விரும்புகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனிமனித தலைமைத்துவம் சம்பந்தன் ஐயாவுடன் முற்றுப்பெறும்.

கேள்வி:- இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் பேசியிருக்கிறீர்களா?

பதில்:- இன்னும் இல்லை. அவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றபடியால் இந்த விடயத்தை அவரிடம் நேரில் இடித்துரைத்துக் கூற விரும்பவில்லை. சந்தர்ப்பம் ஏற்படும்போது கட்டாயம் அதை நாங்கள் செய்வோம். ஏனென்றால் சம்பந்தன் ஐயாவால் இயலாமல் இருக்கின்றது.

எனவே, இந்த விடயத்தில் ஐயா கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக சர்வகட்சி அரசு அமைந்தால் அதில் சஜித் பிரேமதாஸவின் கட்சியினர் பங்கேற்றால் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான். இந்நிலையில், சம்பந்தன் ஐயா வயது முதிர்ந்த நிலையில் அந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பொறுப்பேற்க முடியாது.

ஆகவே, தற்போதைய நிலைமையில் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். கூட்டுத் தலைமைக்கு அதாவது சுழற்சி முறை தலைமைக்கு அவர் இடம் கொடுக்க வேண்டும். இது தொடர்பில் விரைவில் - சந்தர்ப்பத்தை வைத்துக்கொண்டு அவருடன் பேசிப் பார்ப்போம்.

சம்பந்தனை விலகுமாறு செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க கோரிக்கை | Selvam Requests Sambandhan To Withdraw

கேள்வி:- கூட்டுத் தலைமை என்றால் நீங்கள் (செல்வம் அடைக்கலநாதன்) அல்லது சித்தார்த்தனா தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்?

பதில்:-  ஆம், அப்பிடித்தான் வரும். இதுவரை காலமும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பிலேதான் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் ஐயா பதவி வகிக்கின்றார். ஆகவே, நாங்கள் மூன்று பேரும் பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் அந்தத் தலைமை தாங்கும் வாய்ப்பை ஏற்படுத்துவோம்.

மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US