ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன்: தேசிய மாநாட்டில் தெரிவு
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
ரெலோவின் 12வது தேசிய மாநாடு வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று(14.06.2026) இடம்பெற்றுள்ளது.
தலைவர் தெரிவு
இதன்போது, இயக்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, செயலாளராக கோவிந்தம் கருணாகரன் (ஜனா), உபதலைவராக சுரேன் குருசாமி, நிதிச் செயலாளராக க.விஜிந்தன், நிர்வாக செயலாளராக நித்தியானந்தன், தேசிய அமைப்பாளராக செந்தில்நாதன் மயூரன், இளைஞரணி செயலாளராக பிரபாகரன், ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தலைமைக் குழு மற்றும் மத்தியகுழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.