மக்களுக்கு சார்பான இந்திய திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.. செல்வம் அடைக்கலநாதன்
இந்தியா எத்தனை அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது நன்மை தரக்கூடிய அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஆதரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் நேற்று (23) இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "உள்ளுராட்சிமன்றம் ஒரு சிறிய அரசாங்கம். அதன் பணி வீதி அமைப்பது, தெரு மின் விளக்கு போடுதல் மாத்திரமே என்று நினைக்க வேண்டாம்.
இந்தியாவின் திட்டங்கள்
இந்த உள்ளூராட்சி சபைகள் ஊடாகவே பல்வேறு சட்டங்களையும், பிரதேசங்களுக்கான வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த முடியும். எமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படுகின்ற சட்டவிரோத மண் அகழ்வை நாங்கள் எமது சபைகள் ஊடாக தடை செய்ய முடியும்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு பகுதியில் சுற்றுலாத்துறையை யும் அபிவிருத்தி செய்ய முடியும். அதற்கான வேலைத்திட்டங்களும் எமது பிரதேச சபை ஊடாக முன்னெடுக்க முடியும். எந்த அபிவிருத்தியாக இருந்தாலும் பிரதேச சபைகள் ஊடாகவே முன்னெடுக்கப்படும்.
மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து அபிவிருத்திகளையும் எமது சபைகள் ஊடாக முன்னெடுக்க முடியும். இந்தியாவுடன் கூடுதல் நெருக்கத்துடன் நாங்கள் இருக்கிறோம்.
இந்திய அரசு மன்னாரில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவர்கள் எத்தனை அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது நன்மை தரக்கூடிய அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஆதரித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
உதாரணமாக ராமேஸ்வரம், தலைமன்னார் கப்பல் சேவை வேளைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளது.இவ்வாறான நல்ல விடயங்களுக்கு நாங்கள் இந்தியாவுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக எமது பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
