செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக திட்டமிட்டு செய்த சதி.. குற்றம் சுமத்தும் சுரேன் குருசாமி
செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கட்சிக்கு எதிராக திட்டமிட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப்பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (09.11.2025) இடம்பெற்ற கடாபி தலைமைக் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு கூட்டம் வுனியாவில் நடைபெற்றது.
எடுகப்பட்ட முடிவுகள்
இதில் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், 2026 பேராளர் மாநாடு, மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

கடந்த சில வாரங்களாக திட்டமிட்ட வகையிலே சில முகநூல்களிலும், இணைய தளங்களிலும் நமது கட்சிக்கு எதிரான அல்லது கட்சியை களங்கப்படுத்தும் வகையிலே சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விமர்சனங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
அது சம்பந்தமாக தலைமை குழுவிலே நாங்கள் கூடி ஆராய்ந்திருந்தோம். அதற்கான சரியான வழிமுறைகள் அதை கையாளுவதும், தொடர்ந்து கட்சியை முன்னெடுத்து செல்வது சம்பந்தமான விடயங்களை பரிசீலிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.
அந்த முடிவாக மிக விரைவிலே அதாவது ஜனவரி 2026க்குள் எங்களுடைய கட்சியினுடைய பேராளர் மாநாட்டை அனைத்து மாவட்டத்தின் உறுப்பினர்களையும் ஒருங்கமைத்து இது சம்பந்தமான முடிவுகளை எட்டி எங்களுடைய கட்சியை மேலும் பலப்படுத்திக்கொண்டு பயணிப்பதற்கான தீர்மானத்தை எடுத்திருக்கிறோம்" என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |