அரசாங்கம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
இந்த அரசாங்கம் மக்களுக்கு அபிவிருத்தியை மேற்கொள்வதாக வெறும் வாய்ப்பேச்சுடன் கூறிக்கொண்டு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் ஜனநாயக மீறல்களை செய்து வருகிறது. அவர்களின் அங்கத்தவர்களை வைத்து கிராமம் தோறும் அபிவிருத்தி குழுவை உருவாக்கி செயல்பட முயல்கின்றது.
எதிர்ப்பு
அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு பிரதேச சபைகள், இனி வரவுள்ள மாகாணசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கப்படவில்லை.
மேலும் இராணுவத்திற்கு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை குறித்த வாசிப்பின் போது எதிர்த்துள்ளோம். கடந்த வருடம் நிதியை வடக்கிலே கூடுதலாக செலவழிப்பதாக கூறிய போதும் ஒரு வேலைத்திட்டமும் இடம் பெறவில்லை.

தற்போது கிழக்கிலும் தமது அபிவிருத்தி பணியை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது இந்த அரசாங்கம். எங்களை பொறுத்தவரையில் எமது மக்களின் இனப்பிரச்சினை தீர்வில் இந்த அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை.
தீர்வு
ஐ.நா. தீர்மானத்தின் படி உள்ளக விசாரணைகளை முன்னெடுப்பதாக கூறி உள்ளார்கள். அதில் எமது பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என கூறினாலும், இந்த அரசாங்கம் கால நீடிப்பை மேற்கொள்ளவே முயற்சிக்கிறது என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த அரசாங்கம் மக்களுக்கு அபிவிருத்தியை மேற்கொள்வதாக வெறும் வாய்ப்பேச்சுடன் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam