சி.வி.கே. சிவஞானத்திற்கு பதில் கடிதம் அனுப்பிய செல்வம் அடைக்கலநாதன்!

Selvam Adaikkalanathan Local government Election ITAK
By Kajinthan Mar 06, 2025 05:08 AM GMT
Report

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் சம்பந்தமான சி.வி.கே. சிவஞானத்தின் கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பதில் கடிதம் ஒன்றை சி.வி.கே.சிவஞானத்திற்கு அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் இணைந்து செயலாற்றுவது சம்பந்தமாக தங்களுடைய விருப்பத்தை அதில் வெளிப்படுத்தியிருந்தீர்கள்.

தேசபந்துவை கைது செய்யும் உத்தரவுக்கு முன் நிகழ்ந்தது என்ன..! முன்னாள் அமைச்சரின் சூழ்ச்சியா..

தேசபந்துவை கைது செய்யும் உத்தரவுக்கு முன் நிகழ்ந்தது என்ன..! முன்னாள் அமைச்சரின் சூழ்ச்சியா..

உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒன்றான எமது கட்சி பல்வேறு விதமான சவால்கள் விமர்சனங்கள் இடையூறுகள் எல்லாவற்றையும் தாண்டி, எமது மக்களின் இன நலன் சார்ந்து ஒற்றுமையாகவும் பலமாகவும் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்பதில் பல விட்டுக் கொடுப்புக்களோடும் சகிப்புத்தன்மையோடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தொடர்ந்தும் பயணித்து வருகிறது.

சி.வி.கே. சிவஞானத்திற்கு பதில் கடிதம் அனுப்பிய செல்வம் அடைக்கலநாதன்! | Selvam Adaikalanathan Sent Letter Response To Cvk

2023இல் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக தங்களுடைய மத்திய குழு, வவுனியாவிலும் பின்னர் இறுதியாக மட்டக்களப்பிலும் எடுத்த ஏகோபித்த முடிவிற்கமைய தமிழ் அரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.

எமது கட்சியும், புளொட் அமைப்பும் அந்த நேரத்தில், தேர்தல் நலன்கள், வெற்றி தோல்விகள், அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ளல் என்பவற்றைத் தாண்டி இன நலன் சார்ந்து ஒருமித்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தை தங்கள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்திய போதும் தங்களது கட்சி மத்தியகுழுவின் முடிவே இறுதியானது, என உறுதியாக தனித்துப் போட்டியிடுவதென்ற முடிவை அறிவித்தீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நலிவடையாமல் தொடர்ந்தும் பாதுகாப்பதன் நோக்கத்தோடு தமிழ் தேசிய பரப்பில் இருந்த கட்சிகளோடு ஒன்றிணைந்து கூட்டணியாக நாம் பயணித்துக் கொண்டிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை

இனப்பிரச்சினை தீர்வுக்கு முகம் கொடுத்திருக்கும் நமது இனம் தேர்தல் நலன்களை மாத்திரம் முக்கியப்படுத்தும் இந்தப் பிரிவின் மூலம் எதிர்காலத்தில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தீர்க்கமாக நாம் எதிர்வு கூறி இருந்தோம்.

சி.வி.கே. சிவஞானத்திற்கு பதில் கடிதம் அனுப்பிய செல்வம் அடைக்கலநாதன்! | Selvam Adaikalanathan Sent Letter Response To Cvk

இன்று அந்த நிலைக்கு எங்களுடைய இனம் தள்ளப்பட்டிருப்பதை நன்கு உணர்ந்து, இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி தாங்கள் முன் வைத்துள்ள அழைப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

இன நலத்திற்காக விட்டுக்கொடுப்போடு பயணிப்பதற்கு நாம் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்.

விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்தே அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பது எமது இனத்துக்கு நலன் பயக்கும் என்ற கொள்கையோடு ரெலோ, ஈபி ஆர் எல் எப், ஈரோஸ் ஆகியோருடன் ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ஈ. என். எல். எப் ) என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்கள் நாங்கள். 

எமது கூட்டணியின் அங்கத்துவ கட்சிகள்

மேலும் கடந்த 2024 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் நாம் மக்கள் நலன் சார்ந்து ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்போடு வெற்றி தோல்விகளை கருத்தில் கொள்ளாது பயணித்தமையையும், அம்பாறை மாவட்டத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாடு தங்கள் கட்சியின் நிலைப்பாட்டால் தொடரமுடியாமல் போன துரதிர்ஷ்டமான சூழலையும் கவலையுடன் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

சி.வி.கே. சிவஞானத்திற்கு பதில் கடிதம் அனுப்பிய செல்வம் அடைக்கலநாதன்! | Selvam Adaikalanathan Sent Letter Response To Cvk

தங்கள் அழைப்பை ஏற்று எமது கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளோடும் கலந்தாலோசித்து ஒன்றிணைந்து பயணிப்பது சம்பந்தமான தீர்க்கமான ஒரு முடிவை எட்ட நாம் தயாராக உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்வி துறையில் நிகழவுள்ள மாற்றம்! பிரதமரின் அதிரடி அறிவிப்பு

கல்வி துறையில் நிகழவுள்ள மாற்றம்! பிரதமரின் அதிரடி அறிவிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US