வவுனியாவில் பாடசாலை உட்பட பலருக்கு பழுதடைந்த முட்டை விற்பனை..!
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள முட்டை விற்பனை நிலையத்தில் பாடசாலை உட்பட பலருக்கு பழுதடைந்த முட்டை விற்பனை செய்ததாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையை மாலை மேற்கொண்டுள்ளனர்.
சோதனை நடவடிக்கை
இதன்போது பொது சகாதார பரிசோதகர்களால் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளும் மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் இயங்கி வரும் முட்டை விற்பனை நிலையத்தில் இருந்து பாடசாலை மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் பழுதைடைந்த நிலையில் கணப்பட்டதாக வவுனியா பொது சுகாதர பரிசோதகர்களுக்கு கிடைத்த 3 முறைப்பாடுகளை அடுத்து குறித்த வர்த்தக நிலையம் மீது சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது பாவனைக்கு உதவாத முறையில் முட்டை விற்னை செய்ததாக குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அதிகளவலான முட்டைகளும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 10 மணி நேரம் முன்

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
