யாழில் நிலத்தில் புதைத்து மதுபான விற்பனை: பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் முற்றுகை(Photos)
யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்களை நிலத்தில் புதைத்து வைத்து விற்பனை செய்த மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த தலமையில் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்பாண பொலிஸ் போதைதடுப்பு பிரிவினரும் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
விசேட சுற்றிவளைப்பு
மேற்படி சுற்றிவளைப்பின் போது, 126 மதுபான போத்தல்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கஸ்தூரியர் வீதி, கலட்டி சந்தி மற்றும் முலவை சந்திப் பகுதியில்
நடாத்திய தேடுதலின் போது மேற்படி மதுபான போத்தல்களை பொலிஸ் புலனாய்வாளர்கள் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |