அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை:வெளியான தகவல்
அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள அரச துறை ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக சுய ஓய்வு பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த சுய ஓய்வு பொறிமுறையின் மூலம் திறமையற்ற பொதுத்துறை ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்று வாராந்திர அமைச்சரவை மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
திறைசேரியின் சுற்றறிக்கை
மேலும் கூறுகையில்,“அனைத்து திணைக்களங்களிலும் தமது செலவினங்களைக் குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் திறைசேரி வழங்கிய அறிவுறுத்தலுக்கு இணங்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் சுற்றறிக்கைகளுக்கு அமைச்சின் செயலாளர்கள் அனைவரும் கட்டுப்பட்டுள்ளனர்.
அரச சேவையில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படமாட்டாது.
குறிப்பிட்ட அரச நிறுவனத்தில் உள்ள வெற்றிடங்கள் தற்போதுள்ள பணியாளர்களை கொண்டு நிரப்பப்படும்.”என கூறியுள்ளார்.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
