மன்னாரில் பாவனைக்கு உதவாத கோதுமை மா பறிமுதல் (PHOTOS)
மன்னார் - மூர்வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத 50 கிலோ கிராம் நிறையுடைய 100க்கும் அதிகமான கோதுமை மா மூடைகள் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களால் இன்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவு மற்றும் DCDB பிரதேச குற்றபுலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மூர்வீதி பகுதி வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது பாவணைக்கு உதவாத உரிய முறையில் களஞ்சியப்படுத்தாத 100க்கும் மேற்பட்ட கோதுமை மா மூட்டைகள் கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபருக்கு எதிராக வழக்கு தாக்கல்
கோதுமை மா மூடைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன், மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களால் மா மூடைகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நபருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறித்த நபர் மன்னார் நகர் பகுதியில் வெதுப்பகம் ஒன்றை நடாத்தி வருவதுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாகவும், வெதுப்பகத்தில் பாவனைக்கு உதவாத மா மூடைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதே நேரம் வரும் நாட்களில் மன்னார் நகர் பகுதிகளில் உள்ள வெதுப்பகங்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் அவற்றின் களஞ்சியசாலைகள் சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
