இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கோடி மதிப்பிலான கடலட்டை பறிமுதல் (PHOTOS)
இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் காத்தான் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளுடன் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒருவர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட சுமார் 200 கிலோ மதிப்புள்ள கடல் அட்டைகளை, வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த போது கேணிக்கரை காவல் துறையினர் இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில், ஒருவர் தப்பியோடியுள்ளதுடன், மற்றொருவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் விசாரணை செய்ததில் இலங்கைக்கு படகு மூலம் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்பட இருந்துள்ளமை தெரியவந்தது.
இராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை
இதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில், அவரிடம் இருந்த சுமார் 200 கிலோ மதிப்புள்ள ஒரு கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



