இலங்கைக்கு கடத்த இருந்த பல இலட்சம் பெருமதியான பொருட்கள் பறிமுதல்
இந்தியா-ராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த இந்திய பெறுமதியின்படி 16 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் இந்திய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
கடத்தல் பொருட்கள் இலங்கைக்கு கடத்த உள்ளதாக பொலிஸாருக்கு இன்று (29.12.2023) இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
இதையடுத்து புதுமடம் கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை சோதனையிட்ட போது எண்ணெய், வாசனை திரவியங்கள், சவர்க்காரம் உள்ளிட்ட இந்திய பெறுமதியின்படி 16 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
