இன்றும் நாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கும்! வெளியானது அறிவிப்பு - செய்திப்பார்வை (Video)
இன்றைய தினம் மின்வெட்டுக்கான இலங்கை மின்சாரசபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேர மின்வெட்டும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேர மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
அதேபோல், A,B,C,D,E,F,G,H வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணி நேர மின் வெட்டும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்களும் மின் வெட்டும் நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,