உலகமே வியந்த இராவணனை சீதை அறியாமல் இருந்திருப்பாரா?
மாமன்னன் இராவணன் பற்றி பேசும் போது ராமன் - சீதை ஆகியோர் நினைவுக்கு வருவது இயல்பு. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரான இந்த இராவணன் - ராமன் கதையின் பல்வேறு புராணங்களை நாம் தற்போதும் கேட்க கூடியதாக இருக்கின்றது.
தற்காலத்தில் பல தொழிற்நுட்ப முறைகளின் முன்னேற்றத்துடன் நவீன இயந்திரங்களை உற்பத்தி செய்து பல நாடுகள் தமது கௌரவத்தை உலகத்திற்கு பறைசாற்றி தாமே உலகில் முன்னேறிய இனம், தமது நாடே உலகில் முன்னேறிய நாடு என கௌரவத்தை உருவாக்கி வருகின்றன.
தற்போது திறமைகளை காட்டி வரும் மேற்குலக மக்கள் காடுகளில் வசித்த யுகத்தில் வானில் விமானத்தில் பறந்து சென்ற ஒரே தலைவன், ஒரே ஆட்சியாளன் மாமன்னன் இராவணன் என்பதை எந்த வாத விவாதங்களும் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயமாகும். அந்த காலத்தில் எந்த ஆட்சியாளரிடமும் இல்லாத திறமையான அற்புதமான சக்திகள் இராவணனுக்கு இருந்ததுடன் அவர் தனது வல்லமையால் உலகத்தை ஆண்டார். உலகத்தை மாத்திரமல்ல, இந்த பிரபஞ்சத்தையும் ஆளக் கூடிய அற்புதமான சக்தி இராவணனுக்கு இருந்தது என புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
இலங்கையில் அன்று வாழ்ந்த மிக உயர்ந்த, சிறப்பான திறமைகளை கொண்டிருந்த இந்த ஆட்சியாளனை பற்றி முழு உலகமும் அறிந்திருந்ததால், இந்தியாவின் இளவரசர் ராமனின் மனைவி சீதை அறியாதிருக்க வாய்ப்பில்லை. தனது கணவரான இளவரசன் ராமன் மாத்திரமல்லாது உலகில் ஏனைய ஆட்சியாளர்கள் பூமி வழியாக பயணம் செய்யும் போது, வாகனத்தில் பறக்கும் திறமை இருந்த இராவணன் மீது சீதைக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருக்க முடியாது.
உலகில் எவருக்கும் இரண்டாம் நிலையில் இல்லாத இந்த அரச தலைவனுடன் வானில் பறந்து செல்ல வேண்டும் என்ற விருப்பமும் ஆசையும் பெண் என்ற வகையில் சீதைக்கு இல்லாமல் இருந்திருக்குமாயின் அது ஆச்சரியத்திற்குரியது. அப்படி நோக்கும் போது, மன்னன் இராவணன், சீதையை கடத்தி வந்தாரா அல்லது சீதை விருப்பத்துடன் இராவணனுடன் வந்தாரா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இவ்வாறு சிந்தித்து பார்ப்பதற்கு மேலும் பல விடயங்களை நியாயமான சாட்சி மற்றும் சான்றுகளாக கருத முடியும்.
இராவணன், சீதையை கடத்திச் சென்றிருந்தால், ராமன் சந்திக்கக் கூடிய விதத்தில் வைத்திருக்கும் அளவுக்கு அறிவிலியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பல பராக்கிரம திறமைகளை கொண்டிருந்த இராவணனால், சீதையை மறைத்து வைக்க விசேடமான மறைவிடம் ஒன்றை உருவாக்க முடியாமல் போயிருக்குமா என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். இப்படியான பல நிலைப்பாடுகள், வாத விவாதங்கள் இராவணன், சீதை தொடர்பான பிரச்சினையில் இருக்கும் மற்றுமொரு முக்கியமான விடயம்.
அப்படியானால், மாமன்னன் இராவணன், சீதையை அழைத்து வந்து, அழகிய மலர்களால் நிறைந்த பூங்காவில் தங்க வைத்துள்ளார். இந்த பூங்கா நுவரெலியாவில் உள்ள ஹக்கலை பூங்கா என தொன்று தொட்டு கூறப்படும் கதைகளில் இன்று கேட்க முடிகிறது. உலகில் தற்போது வாழும் மக்களின் மன கவர்ந்த ஹக்கலை பூங்கா, நுவரெலியாவில் அழகிய குளிரான சூழலில் அமைந்துள்ளமை முக்கிய அம்சமாகும்.
சுமார் 800 மலர் இனங்களுடன் கூடிய இந்த ஹக்கலை பூங்காவை 1861 ஆம் ஆண்டு ஐரோப்பியர் தாவரவியல் பூங்கா என பெயரிட்டனர். அன்று 500 ஏக்கர் நிலப்பரப்பாக இருந்த ஹக்கலை பூங்கா தற்போது, 68 ஏக்கராக சுருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட வரலாற்றுக்கு உரிமை கோரும் ஹக்கலை பல்வேறு யுகங்களில் பல திறமைகளை காட்டியுள்ளது.
ஐரோப்பியர் ஆட்சி காலத்தில் உலகம் முழுவதும் பரவிய மலேரியா தொற்று நோயை குணப்படுத்தும் மருந்துக்கு தேவையான சிங்கோனா என்ற மருத்துவச் செடியை பயிரிட ஹக்கலை பூங்காவை பயன்படுத்தியுள்ளனர். முதலாது சிங்கோனா செடியும், முதலாவது தேயிலை செடியும் ஹக்கலை பூங்காவிலேயே உள்ளன என்பது சிறப்பம்சமாகும்.
எவ்வாறாயினும் மிக சுவாரஸ்சியமான பல கதைகளுக்கு உறவு கூறும் ஹக்கலை பூங்காவின் பெயர் பற்றியும் பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. மன்னன் இராவணன் சம்பந்தப்பட்ட கதைகளில், இராவணன், சீதையை அழைத்து வந்து, ஊவா பரணகம பகுதியில் கற்குகை ஒன்றில் நிர்மாணித்த விசேடமான மாளிகை அமைந்துள்ள ஹக்கலையிலேயே முதலில் தங்க வைத்ததாக கூறப்படுகிறது.
அன்று இந்தியாவில் காணப்பட்ட சூழ்நிலையும் ஹக்கலை பகுதியில் காணப்பட்ட குளிரான சூழலும் காரணமாக சீதைக்கு கண் நோய் ஏற்பட்டு, கண் தெரியாமல் போனதாகவும் அப்போது ஹக்கலையில் மருந்துச் செடிகளையும் பயிரிட்டிருந்ததால், அந்த காலத்தில் மிக திறந்த கண் வைத்தியராக இராவணன், அதில் இருந்து பெறப்பட்ட மருந்தை பயன்படுத்தி, சீதைக்கு மீண்டும் கண் பார்வையை பெற்றுக்கொடுத்தார் எனவும் புராணக்கதைகளில் கூறப்படுகிறது.
இப்படி மருந்துவம் செய்து வந்த நேரத்தில் இராவணன், சீதை உண்பதற்காக மருத்துவ குணம் கொண்ட அக்கலாவல என்ற உணவை வழங்கியதாகவும் அதனை உண்ணாத சீதை, தூக்கி வீசியதாகவும் இதனால், அந்த உணவு காலப் போக்கில் பாசாணமாக மாறியதாகவும் இதனால், அக்கலாவல ஹக்கலையாக மாறியதாகவும் நம்பப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் மேலும் சில சான்றுகளும் உள்ளன.
அவற்றில் இராவணன், சீதைக்கு பார்வையை பெற்றுக்கொடுத்த இடம் சீதா-எலிய என்று தற்போதும் அழைக்கப்படுகிறது. அத்துடன் சீதைக்காக நிர்மாணிக்கப்பட்ட உலகில் ஒரே ஒரு கோயிலும் நுவரெலியாவின் சீதா - எலிய பிரதேசத்திலேயே அமைந்துள்ளது.
பல மாதங்களாக அந்த பிரதேசத்தில் தங்கி இருந்த சீதை தனது எண்ணம் ஈடேற வேண்டி பூக்களை அருகில் ஓடும் ஆற்றில் போடுவார் எனவும் அந்த பூக்கள் ஆற்றில் வேறொரு இடத்தில் வெளியில் வந்தது எனவும் நம்பிக்கைகள் உள்ளன. தற்போது மக்கள் தமது பிரார்த்தனைகள் நிறைவேற்றுமாறு வேண்டி, வெள்ளை பூக்கள் மற்றும் சிகப்பு பூக்களை ஆற்றில் போடும் வெள்ளை மலர் முதலில் வெளியில் வந்தால், எண்ணம் ஈடேறும் எனவும் சிகப்பு மலர் வெளியில் வந்தால், எண்ணம் ஈடேறாதுவும் நம்புகின்றனர்.
அன்றைய காலத்தில் ராமனுடன் சீதையை தேடி வந்த ஹனுமனின் பாதங்கள் என நம்பப்படும் அடையாளங்கள் ஆற்றின் ஓரேத்தில் இருக்கும் கற்பாறைகளில் இருக்கின்றது என்பது மக்களின் நம்பிக்கை. இவ்வாறான பல முக்கியமான தடயங்களை உள்ளடக்கிய ஹக்கலை பூங்கா மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்கள் இன்று மட்டுமல்ல, எதிர்காலத்திலும் மக்களை மகிழ்ச்சிக்கும், ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும் மண்ணாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த மண்ணின் தனிச்சிறப்பே பிரபஞ்சத்தையே தன் வல்லமையால் ஆண்ட ஒரு மன்னன் தன் வாழ்வில் பல சிறப்புகளைச் செய்ய காரணமாக அமைந்திருக்கும்.
நன்றி - மௌரட்ட
மொழியாக்கம் ஸ்டீபன் மாணிக்கம்