தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி செலுத்திய சீமான்..!
புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த எங்களை புலிகளாக மாற்றியவர் அவருடைய பாடல்கள் தான். அவருடைய பெயர் தேனிசை செல்லப்பா என்றாலும், அவர் எழுச்சியின் குரலாகவே பார்க்கப்படுகிறார் என சீமான் தெரிவித்துள்ளார்.
தேனிசை செல்லப்பாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவருடைய பாடல்கள் இருக்கும் வரை தமிழ் சமூகத்தினரின் மத்தியில் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
அவருடைய புகழை வருங்காலத்தினருக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பும் எமக்குள்ளது.
ஈழத்தமிழர்களின் வலியை தனது குரலால் வெளிப்படுத்தியவராகவே அவர் எம்முன் திகழ்கிறார் என தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு
தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எழுச்சி பாடல்கள் பல நூறு பாடல்களை பாடிய தேனிசை செல்லப்பாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - றெட்பானா சந்தி பகுதியில் நேற்று(28.04.2026) அப்பகுதி மக்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் அகிலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் எழுத்தாளர் யோ. புரட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வு வள்ளுவர்புரம், இளங்கோபுரம், மாணிக்கபுரம், தேராவில் மக்கள் ஏற்பாட்டின் கீழ் இடம்பெற்றுள்ளது.
மேலதிக தகவல் - கீதன்


