இந்திய கடற்றொழிலாளர்களிடம் இருந்து தப்பி வந்த யாழ். இளைஞர்கள்
யாழ்ப்பாணம் - பலாலி, வடக்கு அன்றனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் மூவர் இந்திய கடற்றொழிலாளர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பலாலி கடலிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் கடற்றொழிலில் ஈடுப்பட்டிருந்த போது எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுப்பட்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் ஐவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தப்பி வந்த யாழ். இளைஞர்கள்
அத்துடன், இலங்கை கடற்றொழிலாளர்களின் படகும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பெற்றோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாளினால் இளைஞர்கள் மூவர் தாக்கப்பட்டதாகவும் இலங்கை கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான கடற்றொழிலாளர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17,18,27 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளதுடன், 27 வயது குடும்பஸ்த்தர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன.
கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு! காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்