சீமான், விடுதலைப் புலிகளின் தலைவரை இரண்டு நிமிடம் கூட சந்திக்கவில்லை! - வைகோ ஆவேசம்
"நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை இரண்டு நிமிடம் கூட சந்திக்கவில்லை, ஆமைக் கறி, மாட்டுக் கறி எல்லாம் சாப்பிடவில்லை."
இவ்வாறு சீமான் கூறுவது முற்றிலும் பொய் என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ (Vaiko) தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,விலிருந்து வைகோ நீக்கப்பட்ட போது, தீக்குளித்து உயிரிழந்த தண்டபாணி, உதயன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஐவருக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு, தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ இல்லத்தில் நடந்தது.
இதன்போது பேசிய வைகோ இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பிரபாகரனை சீமான் இரண்டு நிமிடம் கூட சந்திக்கவில்லை. புகைப்படம் எடுக்க சீமான் ஆசைப்பட்டார். புகைப்படம் எடுக்கக் கூடாது என்று பிரபாகரன் கூறினார். 'பிரபாகரனுடன் சேர்ந்து ஆமைக் கறி சாப்பிட்டேன், உடும்புக் கறி சாப்பிட்டேன், மாட்டுக் கறி சாப்பிட்டேன்' என சீமான் பொய் சொல்கிறார்.
விடுதலை புலிகள், சீமான் மீது கடும் கோபத்தில் உள்ளனர். எல்லா இடங்களிலும் சீமான் பொய் பேசுகிறார். விடுதலை புலிகள் பற்றியும், பிரபாகரனை பற்றியும் பேசி, ஒன்றும் தெரியாத இளைஞர்களை மூளைச்சலவை செய்து தன் பக்கம் இழுக்கிறார்.
இதேவேளை, தமிழ் ஈழம் மலர, மீண்டும் பிரபாகரன் படை உருவாகிறது என்ற உணர்வுடன் பாடுபடுவேன். எந்த ஒரு கனவுக்காக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தேனோ, அந்த கனவு நிறைவேற, மீண்டும் போராடுவேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 23 மணி நேரம் முன்
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri