ஊடகவியலாளரை மிரட்டிய தேரரின் வார்த்தைகளால் கிளம்பியுள்ள சர்ச்சை!
ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோபம் கொண்டு 'பல்லை உடைப்பேன்' என கடும் தொனியில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஒரு பௌத்த மத குரு அவ்வாறு கோபத்துடன் செயற்படுவது,பௌத்த தர்மத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயற்பாடாகும் என புத்திஜீவிகள் மற்றும் சிரேஷ்ட ஊடவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய கருத்து
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விஜயராமையவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சீலரத்ன தேரர் சென்று வெளியில் வந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,ஊடகவியலாளர் ஒருவர், ''நீங்கள் பிரதமர் ஹரிணியை முன்னர் திட்டனீர்கள்,இப்போது அவருக்கு சார்பாக பேசுகிறீர்கள்'' என்று கேள்வி எழுப்பியதற்கே,தேரர் கோபம் கொண்டு கையை நீண்டி பயமுறுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த தேரர், பிரதமர் ஹரிணியின் நல்ல விடயங்களுக்கு நான் எப்பவும் சார்பாகவே இருப்பேன். தவறை சுட்டிக்காட்டி பேசுவேன். நீங்கள் நினைக்கும் பெண்மணியல்ல பிரதமர் ஹரிணி, ஜே.வி.பி அவருக்கு எதிராக செயற்பட முனைந்தால் அனைத்தையும் முறியடிக்கும் வலிமையை கொண்டுள்ளார்.
அத்தோடு கல்வியில் முன்னிலை வகிக்கும் அவருக்கு, எந்த சவாலுக்கும் முகம் கொடுக்கும் திறமை அவரிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்



