தொடருந்து பாதைகளை மீளமைக்க வெளிநாட்டு உதவிகள்
பேரிடலில் பாதிக்கப்பட்ட தொடருந்து பாதைகளை மீளமைக்க வெளிநாட்டு தொடருந்து பொறியியல் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பேரிடர் மீட்பு நிறுவனங்களிடமிருந்து உடனடியாக உதவி பெறுமாறு இலங்கை தொடருந்து நிலைய அதிபர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜெயசேகர ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோட்டுக் கொண்டுள்ளார்.
பாதைகள் மறுசீரமைப்பு, அணைகளை உறுதிப்படுத்துதல், பாலங்கள் மறுசீரமைப்பு மற்றும் சமிக்ஞை மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவம், மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் விரைவான பயன்பாட்டு திறன்கள் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாதைகள் புனரமைப்பு
அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது, குறைந்த எண்ணிக்கையிலான தொருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அவற்றில் கடலோரப் பாதை முக்கிய செயல்பாட்டு பாதையாகும்.
ஏற்பட்ட சேதத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஒரு சங்கமாக, வெளிநாட்டு ரயில்வே பொறியியல் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பேரிடர் மீட்பு நிறுவனங்களிடமிருந்து உடனடியாக உதவி பெறுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
சாத்தியமான அனைத்து ரயில் பாதைகளையும் படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் திறப்பதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
குறிப்பாக, உடனடியாக மறுசீரமைக்கக்கூடிய பிரிவுகளில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam