15 அடிக்கு மேல் பாய்ந்தோடிய வெள்ளம்! 3 கிராமங்கள் முற்றாக அழிந்த சோகம்
தெதுருஓயா பெருக்கெடுத்து 15 அடிக்கு மேல் வெள்ளம் பாய்ந்ததில் பிங்கிரிய-வெல்லன்கிரிய-மோலஎலிய கிராமங்கள் முற்றாக அழிந்துபோயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கிராமத்தவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

15 அடிக்கு மேல் பாய்ந்தோடிய நீர்
இவ்வாறான வெள்ளப்பெருக்கு எமது வாழ்க்கையில் கண்டதில்லை. சாதாரண மழைக்கும் தெதுரு ஓயாவில் 3-5 அடிக்கு வெள்ளம் வருவது வழமையாகும். இது 15 அடிக்கு மேல் நீர்பாய்ந்தோடியது.
வீட்டில் இருந்த எந்த பொருட்களையும் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது.நான் கஷ்டப்பட்டு வாங்கிய சைக்கிள் கூட இன்றில்லை. உடுத்திய உடையுடன் தான் இருக்கின்றோம்.

வாழ்வாதரத்துக்கு வளர்த்த ஆடு,மாடுகள் அனைத்தும் அழிந்துபோயுள்ளன. விவசாய நிலங்கள் அழிந்துள்ள நிலையில், இனி ஒன்றும் செய்துகொள்ள முடியாத கடுமையான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளோம்.
எதிர்வரும் காலங்களில் எப்படி வாழ்வது என தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.