கிளிநொச்சியில் இயந்திரம் மூலம் நாற்று நடுகை செயல்முறை
கிளிநொச்சி - பரந்தன், பன்னங்கண்டி பகுதிகளில் இயந்திரம் மூலம் நாற்று நடுகை பயிற்சியும், செயல்முறையும் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று(14.03.2024) இடம்பெற்றுள்ளது.
அதிகளவிலான விளைச்சல்
இதன்போது கிளிநொச்சி மாவட்ட விவசாயப்பணிப்பாளர் கூறுகையில்,
“இயந்திரம் மூலம் நாற்று நடுகையில் பெறப்படுகின்ற விளைச்சல் ஒரு ஏக்கருக்கு 150 புசலாக கிடைக்கும்.
ஆனால் சாதாரணமாக வீச்சு விதைப்பில் 120 புசலாகவே கிடைப்பதாகவும், நாற்று நடுகையினால் அதிகளவிலான விளைச்சலைப் பெற முடியும்.
பயிர்ச் செய்கையின் போது குறைந்த அளவிலான உரங்களையே பயன்படுத்துவதாகவும் விதைப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7kg நெல் போதுமானது என்பதால் குறைந்த செலவில் அதிகளவிலான விளைச்சலை பெற முடியும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்நிகழ்வில் பயிற்சியில் விவசாயிகள் கமநலசேவை திணைக்களத்தினர், விவசாய போதனாசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |