யாழிற்கு விரைந்துள்ள முக்கிய குழு! வீதிகளில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் (Photos)
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே உள்ளிட்டோர் அடங்கிய குழு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளது.
2022/2023ஆம் ஆண்டின் காலபோக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் இருப்பினை விநியோகித்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட அரிசி பகிர்ந்தளித்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

இந்நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்னாயக்க, இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து யாழில் வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, நிகழ்வு நடைபெறும் இடங்களிலும் முப்படையினர்
களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam