சுமந்திரன் எம்.பிக்கான பாதுகாப்பு குறைப்பு! நாடாளுமன்றில் கடும் விவாதம்
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரானுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் எழுந்துள்ளது.
இதன்படி, சுமந்திரானுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் பாதுகாப்பை மீள வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பதிலளித்து பேசுகையில்,
அண்மையில் நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்ட பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை இது நிரூபிக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் குறித்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கருத்து வெளியிட்டிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நின்றார், எனவே அவரது பாதுகாப்பை நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என சரத் பொன்சேகா தெரிவித்தார்.
புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான கருணா அம்மான், பிள்ளையான் ஆகியோருக்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு அளித்து வருவதாக சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.