இந்திய பிரதமர் மோடியின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ( Narendra Modi) பல்வேறு உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய காரை பயன்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை டொயோட்டா லேண்ட் குரூஸ் என்ற காரை பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது புதிய மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 (Mercedes-Maybach S 650) என்ற காரை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது,
இப் புதிய கார், Mercedes Maybach S 650 Guard, உலகெங்கிலும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாக்கப்பட்ட வாகனங்களில் வரிசையில் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரதமரின் குதிரைப்படையின் ஒரு பகுதியாக இந்த வாகனம் சமீபத்தில் வாங்கப்பட்டுள்ளது.
குறித்த கார் நிறுவனத்திற்கும் , இந்திய பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர்க்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே குறித்த கார் வாங்கப்பட்டுள்ளது. இதன்போது காரின் ஒவ்வொரு பாதுகாப்பு அம்சத்தையும் ஆய்வு செய்தது மட்டுமல்லாமல், பிரதமரின் பாதுகாப்பின் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களையும் செய்தே காரை வாங்கியுள்ளனர்.
இந்த வகை கார்கள் ஏகே 47 துப்பாக்கி தோட்டாக்களின் தாக்குதலை தாங்கும் சக்தியை கொண்டதாகும். விபத்து ஏற்பட்டால் தானாக பெட்ரோல் டாங்க் மூடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
புகை அல்லது எரிச்சலூட்டும் வாயுக்கள் அல்லது வாயுத் தாக்குதல் போன்ற கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகளைச் சமாளிக்கவும் காரில் சுவாசிக்க ஏதுவாக செயற்கை சுவாசக் கருவியும் இதில் உள்ளது.
6 லிட்டர் V12 இன்ஜின் மூலம் 650 குதிரை சக்தியை உற்பத்தி செய்யும் இந்த கார் 5.45 மீ நீளமும் 3.36 மீ வீல்பேஸும் கொண்டது. வாகனத்தின் கனமான கதவுகள் திறப்பதற்கும் மூடுவதற்கும் மின்சார மோட்டாரைப் பயன்படுத்துகின்றன. இதில் 360 டிகிரி கேமராவும் உள்ளது.
சமீபத்தில் நடந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க மோடி இந்த காரில் சென்றுள்ளார்.
பிரதமரின் வாகனத்தின் உண்மையான விலை தெரியவில்லை என்றாலும், அது 12 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan