நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு: சபையில் சஜித் முன்வைத்த கோரிக்கை
நீதிபதிகள், பொதுமக்கள், குறிப்பாக பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர், நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டை எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர், மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீதித்துறை அமைப்பு சரிந்தால், அரசாங்கம் சமூகத்தில் சரிவைச் சந்திக்கும். நீதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை நீக்க வேண்டாம் என்று நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
பாதுகாப்பு நடவடிக்கை
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் சமுதித சமரவிக்ரம, அண்மைய காலங்களில் தன்னால் நேர்காணல் செய்யப்பட்ட நான்கு பேர் மர்மமான சூழ்நிலையில் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில், இந்த சம்பவங்கள் குறித்த கவலைகளை தெரிவித்துள்ளதுடன், மூத்த பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அதிகாரிகளிடம் எதிர்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அவரது கருத்துக்களின் படி, அண்மையில் மித்தேனிய துப்பாக்கிச் சூட்டில் பலியான 39 வயதான அருண விதானகமகே, அல்லது 'கஜ்ஜா' என்று அடையாளம் காணப்பட்டவர், அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளரால் நேர்காணல் செய்யப்பட்டார்.
மேலும், மூத்த பத்திரிகையாளர் சமுதித சமரவிக்ரமவுடனான யூடியூப் நேர்காணலின் போது, விதானகமகே தன்னை ராஜபக்ச குடும்பத்தின் கூட்டாளியாக முன்னர் அடையாளம் காட்டிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
